நாசாவையே மிஞ்சும் சோதனைக்கு தயாராகும் இஸ்ரோ! இது மட்டும் நடந்தா இஸ்ரோ தான் டாப்!


 நாசாவையே மிஞ்சும் சோதனைக்கு தயாராகும் இஸ்ரோ! இது மட்டும் நடந்தா இஸ்ரோ தான் டாப்!

இந்தியாவின் விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ தற்போது மறு பயன்பாடு செய்யக்கூடிய வகையிலான ராக்கெட்டுகளை வடிவமைத்து வருகிறது. இந்த ராக்கெட்டுகள் தற்போது உள்ள ராக்கெட் அல்லாமல் ஒரே ராக்கெட் மீண்டும் மீண்டும் விண்வெளிக்கு அனுப்பக்கூடிய வகையில் உருவாக்கப்படுகிறது. இதனால் விண்வெளிக்கு ஒரு முறை ராக்கெட் பறந்த உடன் மீண்டும் பத்திரமாக லேண்ட் செய்வது குறித்த சோதனைகள் நடந்து வருகிறது. இதில் மூன்றாம் கட்ட சோதனைக்காக தற்போது இஸ்ரோ தயாராகி வருகிறது. தற்போது மீண்டும் மீண்டும் பயன்படும் வகையில் ராக்கெட் உருவாக்கப்பட்டால் உலகிலேயே இப்படியான ராக்கெட்டை உருவாக்கிய வெகு சில நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக மாறும்.