Showing posts with the label QuotesShow all
சிக்கலிலும்,சிக்னலிலும், பொறுமையாக காத்திருந்தால் போதும், வழி தானாக கிடைத்துவிடும்.
சின்ன சின்ன செலவுகளை குறையுங்கள். காரணம், எவ்வளவு பெரிய கப்பலையும் சிறிய ஓட்டை மூழ்கடித்துவிடும்.
விமர்சனங்கள் முன் வீழ்ந்து விடாதே! விடாமுயற்சி மட்டுமே உன் பெயரை மண்ணில் விதைக்கும் விதையாய் இருக்கும் என்பதை மறந்து விடாதே!
காயங்கள் இல்லாமல் கனவுகள் காணலாம்..  ஆனால், வலிகள் இல்லாமல் வாழ்க்கையை வெல்ல முடியாது!
வாய்ப்புகள் உங்களுக்காக காத்திருக்காது, நீங்கள் வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.
அவமானங்களை சகித்து சாதிப்பவன் ஒருநாள் அடையாளமாக உயர்ந்து நிற்பான்..!
வாழ்வில் வெற்றியும் நிரந்தரம் அல்ல தோல்வியும் நிரந்தரம் அல்ல போராட்டம் ஒன்றே நிரந்தரமானது..!
சிறகு உள்ள வரை சிட்டுக்குருவியால் பறக்க முடியுமென்றால் உழைப்பு இருக்கும் வரை உன்னாலும் உயர முடியும்.
எப்பொழுது முடிவுகளை நாமே எடுக்க பழகுகின்றோமோ... அப்பொழுது தான் அதன் விளைவுகளை எதிர்கொள்ளும் தைரியம் நமக்குள் பிறக்கும்.
நீ உன் சிறகை விரிக்கும் வரை நீ எட்டும் உயரம் யாரறிவார்?
கடந்து வந்த பின்பே கண்டு உணர்கிறேன் என்னை கலங்கடித்த காலமெல்லாம் கடுமையான காலம் அல்ல என் வாழ்வை வடிவமைத்த காலமென்று..!
விமர்சனங்களை விதை ஆக்கு! விதையை உன் திறமையில் மரமாக்கு!
எதுவாக இருந்தாலும் சரி.. மூழ்கிவிடாதே! மிதக்க கற்றுக்கொள்.
சுவாசத்தைக் கவனி ஆயுள் கூடும்.  வார்த்தையைக் கவனி மதிப்பு கூடும். செய்யும் செயலை கவனி நிதானம் கூடும். எண்ணங்களைக் கவனி வாழ்வில் வெற்றிகள் கூடும்.
வானவில் தோன்றும் போது வானம் அழகாகிறது.. நம்பிக்கை தோன்றும் போது வாழ்க்கை அழகாகிறது..!
மூடி இருக்கும் உள்ளத்திற்கும் உள்ளங்கைக்கும் மதிப்பு சற்று அதிகமாவே இருக்கும்.
எப்படி வாழ்வான் என்று பார்க்கலாம் என்பவர்களுக்கு மத்தியில் இப்படிதான் வளர்ந்தேன் என்று வாழ்ந்து காட்டுங்கள்.!
சுட்டுவிடும்னு தெரிஞ்சும் கொதிக்கிற டீ'யை குடிக்கிறதுல காட்டும் நிதானம் தான் வாழ்க்கையின் தத்துவம்!
மனநிலை சமநிலையில் இருப்பவர்களால் மட்டுமே என்றும் உயர்நிலையை இயலும்.
சிறந்த பாடத்தை சரியான நேரத்தில் கற்பிக்க தவறாத ஒரே ஆசான் காலம்.