சென்னை உட்பட தென்னிந்தியாவின் பல நகரங்களில் வீடுகளின் விலை உயர வாய்ப்புள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இந்த விலை உயர்வு 8-10 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு மூலதனப் பொருட்களின் விலை உயர்வு காரணமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Advertisement |
அரசியல் பதற்றமும் ஒரு முக்கியக் காரணம்
உயரும் விலைகள் டெவலப்பர்களுக்கான மார்ஜினைப் பாதிக்கலாம். இருப்பினும், இந்த பிரச்சனை தற்காலிகமானது மட்டுமே. தற்போதைய அரசியல் பதற்றம் இயல்பு நிலைக்குத் திரும்பினால், நிலைமை இன்னும் மோசமாகலாம். விலை இயல்பு நிலைக்கு திரும்பலாம். அப்போது வீடுகளுக்கான தேவையும் இயல்பு நிலைக்கு திரும்பலாம்.
கொரோனாவுக்கு முந்தைய நிலை
இது குறித்து Brigade Group அறிக்கையில், வீடுகளின் தேவையானது 5 - 10% அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டில் வீடுகளுக்கான தேவையானது 33 - 38% அதிகரித்தது. இது கொரோனாவுக்கு முந்தைய காலத்தினை விட வளர்ச்சி கண்டது மதிப்பிடத்தக்கது.
கிரிசில் மதிப்பீடு
இதற்கிடையில் கிரிசில் ஆய்வறிக்கையானது நடப்பு ஆண்டில் 6 நகரங்களில் வீடுகளின் விலையானது ரியல் எஸ்டேட் விலையானது 6 - 10% அதிகரிக்கலாம் என கிரிசில் அறிக்கையானது தெரிவித்துள்ளது. மூலதனப் பொருட்களின் விலை உயர்வு மற்றும் வளர்ந்து வரும் தேவை காரணமாக இது சாத்தியமானது என்றார். டெவலப்பர்கள் காலாண்டிற்கு 2% விலையை அதிகரிக்க முன்மொழியப்பட்டது.