பசுமை பள்ளி திட்டம் விவசாயத்தை மேம்படுத்த முயற்சி

 11 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கக்கூடிய வேளாண்மைத் துறை மாணவர்கள் பயன்பெறும் வகையில் இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்றார். 500 பள்ளிகளிலும், மேல்நிலைப் பள்ளிகள் மட்டுமின்றி உயர்நிலைப் பள்ளிகளிலும் இந்த சேவை படிப்படியாக விரிவுபடுத்தப்படும்.மேலும்காலை உணவு திட்டம் படிப்படியாக விரிவுபடுத்தப்படும்9000 ஆசிரியர் பணியிடங்கள் தேவைப்படுகிறது ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக தேவையான அளவுக்கு நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.மேலும் மாணவர்கள் பாதிக்காத வரை பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலமாக ஆசிரியர்கள் பணியமறுத்தப்பட்டு பணி செய்து வருகிறார்கள் என தெரிவித்தார்.அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது குறைக்கப்படுமா என்ற கேள்விக்கு அது சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் கேட்கவும் என தெரிவித்தார்இடைநீற்றில் செய்யக்கூடிய மாணவர்கள் கண்டறியப்பட்டு பள்ளியில் மீண்டும் சேர்க்கப்படுகிறார்கள் மேலும் இடைநீற்றல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படும் மாணவர்கள் முன்கூட்டியே கணிக்கப்பட்டு அவர்களும் பள்ளியில் தொடர்ந்து படிக்க தேவையான ஏற்பாடுகள் செய்து தரப்படுகின்றன.அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 11 மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகள் இயற்கை விவசாய முறையில் காய்கறித் தோட்டம் அமைத்தல் விவசாயத்தின் அடிப்படைகளை புரிந்து கொள்வது போன்றவற்றிற்காக இந்த பசுமை பள்ளி திட்டம் தொடங்கப்படுகிறது. மேலும் சத்துணவுக்கு தேவையான காய்கறிகள் இயற்கை முறையில் பயிர் செய்து அனுப்படும். மேலும் தொழிற்கல்வி உள்ள அனைத்து பள்ளிகளிலும் அதற்கு தகுந்தாற் போல் ஆய்வு கூடங்கள் அமைக்கப்படும் என்று ஏற்கனவே முதலமைச்சர் கூறி இருக்கிறார்.