கொளத்தூர் பாரத் பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போடுபவர்களுக்கு சிறப்பு பரிசு @thanigaiestates2023-புது வருட பிறப்பை முன்னிட்டு பெரம்பூர் பேப்பர்மில்ஸ் சாலையில் SRP காலனி பேருந்து நிறுத்தம் அடுத்து உள்ள பாரத் பெட்ரோல் பங்கில் கடந்த மூன்று மாதமாக தங்களிடம் பெட்ரோல் போடும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு புத்தாண்டு பரிசு குழுக்கள் நடைபெற்றது. அதனை பெரம்பூர் தணிகை எஸ்டேட்ஸ் & கன்ஸ்ட்ரக் ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனர் மற்றும் தமிழ்நாடு நிலமேம்பாட்டாளர்கள் சங்கத்தலைவருமான Dr.S.கிள்ளிவளவன் தலைமை தாங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


கடந்த அக்டோபர் மாதம் 2022 முதல் டிசம்பர் மாதம் 2022 வரை பெரம்பூர் SRP காலனியில் உள்ள பாரத் பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போடும் வாடிக்கையாளர்களின் பெயர் மற்றும் தொலைபேசி எண்களை பதிவு செய்து குழுக்கள் முறையில் தேர்வு செய்யப்பட்ட முதல் நான்கு நபர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.


முதல் பரிசு 32 Inch LED Smart Tv சுகுமார் அவர்களுக்கும்,

இரண்டாம் பரிசு Refridgerator துரை  அவர்களுக்கும் 


மூன்றாம் பரிசு Washing Machine யுவன்குமார் அவர்களுக்கும் 


நான்காம் பரிசு Mixer ராமசுந்தரன் அவர்களுக்கும் வழங்கப்பட்டது.


இதனை தமிழ்நாடு நிலமேம்பாட்டாளர் சங்கத்தலைவர் டாக்டர்.S.கிள்ளிவளவன் அவர்கள் தலைமையில் சிறப்பான முறையில் நடைபெற செய்து தங்களின் வாடிக்கையாளர்களுக்கு புத்தாண்டு பரிசினை வழங்கி அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினர்.