சென்னையில் 30 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. அலறவிடும் இ-மெயில்..


சென்னை: டிஜிபி அலுவலகத்துக்கு இ-மெயில் அனுப்பி சென்னை மெரினா கடற்கரை உள்பட 30 இடங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது அந்த இ-மெயிலில் குறிப்பிடப்பட்டு இருந்த இடங்கள் அனைத்தும் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளாகும். இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் உடனடியாக மோப்பநாய் மற்றும் வெடிகுண்டு தடுப்பு நிபுணர்களுடன் அந்தந்த இடங்களுக்கு விரைந்து தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர். இதனால் சென்னையில் தற்போது பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.