லைசென்ஸ் வாங்க இனி ஆர்டிஓ ஆஃபீஸ் போக வேண்டியது இல்லை - ஜூன் 1 முதல் புதிய விதி அமல்!!

RTO அலுவலகத்திற்கே செல்லாமல் லைசென்ஸ் :



பொதுமக்கள் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான விதிகளை மத்திய அரசு மாற்றியுள்ளது. தற்போதைய விதிகளின்படின் ஒருவர் ஓட்டுனர் உரிமம் வாங்க, அரசு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் (RTO) ஓட்டுநர் சோதனையில் பங்கேற்க வேண்டியுள்ளது. ஆனால் புதிய விதிகளின்படி, ஆர்டிஒ அலுவலகங்களுக்கு மாறாக தனியார் நிறுவனங்களுக்கு ஓட்டுனர் சோதனை நடத்தவும், ஓட்டுனர் சான்றிதழ் வழங்கவும் இப்போது அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதி ஜூன் 1, 2024 முதல் அமலுக்கு வரும் அதன் அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது