சென்னை: உட்பிரிவு இல்லாத நேரடி பட்டா மாற்றம், உட்பிரிவுடன் கூடிய பட்டா மாற்றம் கோரும் விண்ணப்பங்களுக்கு, ஒரே வரிசை எண் வழங்கப்படவில்லை என்று வருவாய் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பட்டாக்களை பொதுமக்கள் எளிதாக பெறும்வண்ணம் புதிய வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன.. காரணம், நிலம் வாங்கும் உரிமையாளர்கள், அந்த இடத்திற்கு பட்டா வாங்குவதற்கு படாதபாடு படவேண்டியிருக்கிறது.. இதற்காகவே கால நேரம் வீணாகிவிடுகிறது. எனவே, பத்திரப்பதிவு துறையில் ஆன்லைன் மூலம் பட்டா பெறும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.