இனி பட்டா வாங்குவது ரொம்ப ஈஸி... இன்று முதல் அமலுக்கு வருகிறது
பதிவுத்துறைத் தலைவரின் அறிவுரையின் படி, 100% தானியங்கி முறையில் பட்டா பெயர் மாற்றம் செய்ய ஜூன் 15ம் தேதி முதல் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
பத்திரப் பதிவுக்கு பின்பு ஆன்லைனில் மேற்கொள்ளப்படும் பட்டா மாறுதல் தொடர்பான அனைத்து தகவல்களும் சம்பந்தப்பட்ட நில அளவர்கள், கிராம நிர்வாக அலுவலர்களிடம் இருந்து எஸ்எம்எஸ் மூலம் கிரையம் கொடுப்பவர், பெறுபவர் இருவருக்கும் தெரிவிக்கப்படும் என வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்