கர்ப்பிணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்.!!!


கர்ப்பிணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்.!!!
ரூ.18,000 பெற இனி வீட்டிலிருந்தே விண்ணப்பிக்கலாம்

தமிழக அரசு கர்ப்பிணி பெண்களுக்கு 18000 ரூபாய் நிதி உதவியை ஐந்து தவணைகளாக வழங்கி வருகின்றது. இந்த உதவி தொகையை பெற கர்ப்பம் தரித்த 12 வாரங்களுக்குள் கிராம மற்றும் நகர சுகாதார செவிலியரிடம் பதிவு செய்து RCH எண் பெற வேண்டும். தற்போது RCH எண்ணை வீட்டிலிருந்தே பெற https://picme3.tn.gov.in என்ற இணையதளத்தில் அரசு அறிமுகம் செய்துள்ளது. இதில் ஆவணங்களை பதிவேற்றம் செய்து RCH எண் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது