வீடு, ஆபிஸ் கட்டுறீங்களா? வாங்குறீங்களா? தமிழ்நாட்டில் வந்தது பெரிய விதி மாற்றம்! இதை நோட் பண்ணுங்க.
சென்னை: தமிழ்நாட்டில் வீடு மற்றும் அலுவலகம் கட்டுபவர்களுக்கான விதிகளை மாற்றி தமிழ்நாடு அரசு முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
தமிழ்நாடு மாநில அரசு தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டிட விதிகள், 2019 இல் திருத்தம் செய்து அறிக்கை வெளியிட்டு உள்ளது. இதன் மூலம் எட்டு குடியிருப்பு அலகுகளைக் கொண்ட கட்டிடங்களுக்கு நிறைவுச் சான்றிதழ் தேவையில்லை என்று கூறும் சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதோடு 3500 சதுர அடிக்கு கீழ் கட்டப்படும் வீடுகளுக்கு, கட்டிடங்களுக்கு அனுமதி தேவையில்லை. முன் அனுமதி பெற்று இதில் கட்டிடம் கட்ட தேவையில்லை என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது