ஜூன் 30 கடைசி நாள்..! செய்ய தவறினால் வங்கிக் கணக்கில் பணம் போடவோ எடுக்கவோ முடியாது..!

 

பஞ்சாப் நேஷனல் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு பெரிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது. பல ஆண்டுகளாக செயல்படாமல் இருந்த சேமிப்பு கணக்குகளை மூடுவதாக அவ்வங்கி தெரிவித்துள்ளது.

கடந்த 3 ஆண்டுகளாக எந்த நடவடிக்கையும் இல்லாத வங்கிக் கணக்குகள் மூடப்படுகின்றன. நீங்கள் நீண்ட காலமாக பஞ்சாப் நேஷனல் வங்கியில் கணக்கு வைத்திருந்து அதை பயன்படுத்தாமல் இருந்தால், ஜூன் 30ஆம் தேதிக்குள் வங்கியைத் தொடர்பு கொள்ள வேண்டும். ஜூன் 30ஆம் தேதிக்கு முன் அதில் பரிவர்த்தனை செய்து அந்த வங்கிக் கணக்கை மீண்டும் செயல்படுத்தலாம். அத்தகைய வாடிக்கையாளர்களின் மின்னஞ்சல்கள் மற்றும் மொபைல் எண்களுக்கு வங்கி தரப்பில் செய்திகள் அனுப்பப்பட்டுள்ளன. இது தவிர, சமூக ஊடகங்கள் மூலமாகவும் வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது