டி20 உலக கோப்பை வரலாற்றில் ஒவ்வொரு தொடரிலும் தொடர் நாயகன் விருது வென்ற வீரர்கள் யார்?

 


டி20 உலக கோப்பை வரலாற்றில் ஒவ்வொரு தொடரிலும் தொடர் நாயகன் விருது வென்ற வீரர்கள் யார்?


 இதன் மூலம் 17 ஆண்டுகளுக்கு பிறகு 20 ஓவர் உலகக் கோப்பையை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தன தாக்கியிருக்கிறது.


இந்த சூழலில் இதுவரை ஒன்பது முறை டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றிருக்கிறது. இதில் இந்தியா,இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய நாடுகள் தலா இரண்டு முறை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி இருக்கிறது.


இந்த நிலையில் ஒவ்வொரு தொடரிலும் சிறப்பாக செயல்படும் வீரர்களுக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்படுகிறது. நடப்பு தொடரில் கூட பும்ரா அபாரமாக செயல்பட்டு ஆட்டத்தை தனியாக மாற்றி இருக்கிறார். இதன் காரணமாக பும்ராவுக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது. இந்த நிலையில் ஒவ்வொரு டி20 உலக கோப்பையிலும் யார் இந்த விருதை வாங்கி இருக்கிறார்கள் என்பதை தற்போது பார்க்கலாம்.


2007ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பையில் பாகிஸ்தான் வீரர் ஆப்ரிடி வென்றிருக்கிறார். 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பையில் இலங்கை வீரர் தில்சான் இந்த விருதை தட்டிச் சென்றிருக்கிறார். 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சன் தொடர் நாயகன் வென்றிருக்கிறார்.


2012 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வாட்சன் கைப்பற்றி இருக்கிறார். 2014 ஆம் ஆண்டு மற்றும் 2016 ஆம் ஆண்டு என இரண்டு டி20 உலக கோப்பை தொடர்களும் தொடர் நாயகன் விருதை விராட் கோலி தமக்கு சொந்தமாக்கி கொண்டு வந்திருக்கிறார்.


2021 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பையில் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் தொடர் நாயகன் விருது பெற்றுள்ளார்.2022 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து வீரர் ஷாம் கரன் இந்த விருதை வென்றுள்ளார். தற்போது இந்த பட்டியலில் பும்ரா சேர்ந்து இருக்கிறார். இந்த விருதை வெல்லும் முதல் இந்திய பவுலர், 2வது இந்தியர் என்ற பெருமை பும்ராவுக்கு கிடைத்திருக்கிறது.