மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2024-25ம் நிதியாண்டுக்கான
மத்திய பட்ஜெட்டை
(UNION BUDGET 2024-25)
நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில், புதிய வருமான வரி வரம்புகளின்படி ரூ.3 லட்சம் வரையில் வருமான வரி கிடையாது. வெளிநாட்டு நிறுவனங்களுக்கான கார்ப்பரேட் வரி 25 சதவிகிதமாகக் குறைப்பு. தங்கம், வெள்ளி, பிளாட்டினம், செல்போன் மற்றும் செல்போன் உதிரி பக்கங்களுக்கான இறக்குமதி வரி குறைப்பு. மூன்று வகையான புற்றுநோய் மருந்துகளுக்கு இறக்குமதி வரி ரத்து. நாடுமுழுவதும் 3 கோடி குடும்பங்களுக்கு புதிய வீடுகள். முத்ரா கடன் தொகை வரம்பை ரூ. 10 லட்சத்திலிருந்து ரூ. 20 லட்சமாக உயர்த்த முடிவு. ரூ.1.52 லட்சம் கோடி விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த துறைகளுக்கு ஒதுக்கீடு. மாணவர்களுக்கான கல்விக்கடன் ரூ. 10 லட்சம் வரையில் வழங்கப்படும் உள்ளிட்ட பலவற்றை நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.