வருமான வரிக் கணக்கு..!! இந்த தவறை செய்தால் கண்டிப்பா அபராதம் தான்..!! மக்களே தெரிஞ்சிக்கோங்க!!


 வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய கடைசி தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்குள் செலுத்தாவிட்டால், அதிக அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். அனைத்து வரி செலுத்துவோருக்கும் தாமதமாக ஐடிஆர் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு டிசம்பர் 31 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட தேதிக்குள் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. வருமான வரிச் சட்டம் 1961 பிரிவு 234எஃப் கீழ் ஐடிஆர் நிலுவைத் தேதிக்குப் பிறகு தாக்கல் செய்யப்பட்டால் அபராதம் விதிக்கப்படும். தற்போது தாமதமாக ஐடிஆர் தாக்கல் செய்தால் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படுகிறது. ரூ.5 லட்சத்திற்கும் குறைவான வருமானம் உள்ள வரி செலுத்துவோர் ரூ.1,000 அபராதம் செலுத்த வேண்டும். 234ஏ பிரிவின் கீழ் அபராதத்திற்கும் வட்டி விதிக்கப்படலாம். முன்கூட்டியே வரி செலுத்துவதில் தாமதம் என்றால், அந்த தாமதத்திற்கான வரி மீதும் அபராதம் விதிக்கப்படலாம். 234ஏ பிரிவின் கீழ் அபராத வட்டி மாதத்திற்கு ஒரு சதவீதம் ஆகும்