கட்டிட அனுமதி: சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமத்தில் கட்டிட அனுமதிக்காக ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் முதல் முறையாக கட்டிட அனுமதியை ஆன்லைனில் உடனடியாக வழங்கும் திட்டத்தை இன்று தலைமைச்செயலகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இத்திட்டத்தின் படி
http://www.onlineppa.tn.gov.in
என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2500 சதுரடி வரையிலான மனையில், 3500 சதுரடியில் கட்டப்படும் வீடுகளுக்கு இத்திட்டம் பொருந்தும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது