விற்பனையும் அதன் கோட்பாடும்

 


#  விலை & தள்ளுபடி
விலை என்பது வாடிக்கையாளர்களை இழுக்க உதவும் ஒரு காரணி. தரத்தை முதன்மையாக கொண்டு வாங்கும் வாடிக்கையாளர்களும் விலை என்ற விஷயத்தில் அடிபட்டுப்போவார்கள். எனவே விலையில் தள்ளுபடி (discount), விலை கழிவு, சலுகைகள் (discount) என்று குறைக்கும்போது வாடிக்கையாளர்களை அதிகமாக வாங்க வைக்க முடியும்.

 
#  EMI & கடன் திட்டம்
மாத தவணை (equated monthly installment -EMI), கடன் திட்டம் போன்ற வசதிகள் இருக்கும்பட்சத்தில் மற்ற கடைகள், நிறுவனங்களில் வாங்குவதை விட அந்த கடையில் வாடிக்கையாளர்கள் விருப்பப்பட்டு வாங்குவார்கள்.

#  விற்பனையை தாண்டிய விஷயங்களை பேசுங்கள்
விற்பனையை (sales) தாண்டி நிறைய விஷயங்களை பேசவேண்டும். கதை பேசுவது என்று சொல்வார்களே அதை போல வியாபார விஷயங்களை தாண்டி பலவற்றை பேசவேண்டும். இன்னமும் கிராமங்களில் உள்ள பெரும்பாலான மளிகை கடைக்காரர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் குடும்பம், கிராமம், அரசியல் போன்ற பல உரையாடல்கள் நடைபெறுவதை பார்க்கலாம்.

#  நல்ல உறவை பேணுங்கள்
வாடிக்கையாளர்களிடம்  வாங்குபவர் என்ற ஒரு பிணைப்பை தாண்டி நண்பன் என்ற உறவை பேணுங்கள். அப்போதுதான் அவர்கள் தொடர்ந்து உங்களிடமே வாங்குவார்கள்.

#  Referral Reward Programs
மற்ற வாடிக்கையாளர்களை பரிந்துரைக்கும் நபர்களுக்கு சில Reward points அளியுங்கள். அதன் மூலம் அவர்களுக்கு சில சலுகைகள் (discount), வெகுமானங்கள் (reward) அளியுங்கள். இந்த சலுகைகள் அவர்களை மாற்ற வாடிக்கையாளர்களுக்கு பரிந்துரைக்க ஊக்கமூட்டும்.