சென்னை: தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை
https://tamilnilam.tn.gov.in/citizen?utm_source=DH-MoreFromPub&utm_medium=DH-app&utm_campaign=DH
என்ற இணையதளத்தை NIC மூலம் உருவாக்கியுள்ளது.
இந்த புதிய சேவையானது மக்களின் நம்பிக்கையை அபரிமிதமாகவே பெற்று வருகிறது. அந்தவகையில், பட்டா மாறுதல், உட்பிரிவு செய்தல் தொடர்பான நில அளவை சேவையில், தரத்தை மேம்படுத்த வேண்டி அவசியமும் எழுந்துள்ளது. "நில அளவை பணியில் தரக்கட்டுப்பாடு வழிமுறைகளை அமல்படுத்த, அரசு முடிவு செய்துள்ளது. சர்வே எண், அதன் உட்பிரிவு எண்ணுக்கு உட்பட்ட நிலத்தின் அளவை, துல்லியமாக பதிவிட வேண்டும். மேலும், நில அளவை வரைபட விற்பனை உள்ளிட்ட சேவைகளில் தரத்தை உறுதி செய்ய வேண்டியிருக்கிறது. இதற்காகவே, மாநில அளவில் தரக் கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்பு மையம் ஏற்படுத்தப்பட திட்டமிடப்பட்டு வருகிறது. அந்தவகையில், சென்னையில், நில அளவை துறை வளாகத்தில், மையம் அமைக்கப்படும். இதன்மூலம், நில அளவை துறையின் சேவைகள் குறித்த புள்ளி விபரங்களை, ஆன்லைனிலேயே உடனுக்குடன் உயரதிகாரிகள் கண்காணிக்க வசதி செய்யப்படும்.