கோபத்தின் போது வார்த்தைகளில் நிதானம் தேவை. கோபம் தீர்ந்து விடும். வார்த்தைகள் வாழ்ந்து கொண்டே இருக்கும்.
பிறர் மனதில் ஆறாத வலிகளாய்.
தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு.
ஒருவனை மற்றொருவன் தீயால் சுட்ட புண் உடம்பின்மேல் வடுவாக இருந்தாலும் உள்ளத்துக் காயம் காலத்தில் ஆறிப்போய்விடும். ஆனால் கொடிய வார்த்தைகளால் நெஞ்சைச் சுட்ட வடு அதில் புண்ணாகவே கிடந்து ஒரு நாளும் ஆறாது