ராணுவப் பள்ளிகளில் பட்டதாரி, முதுகலை பட்டதாரி ஆசிரியர் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!


 இந்திய ராணுவ பொதுப் பள்ளிகளில் ஆரம்பப் பள்ளி ஆசிரியர், பட்டதாரி பயிற்சி ஆசிரியர், முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து வரும் 25 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. www.awesindia.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.