போர்ச்சுகலில் நடைபெற்ற மையா சிடாடே டோ டெஸ் போர்டோ 2025 தடகளப் போட்டியின் நீளம் தாண்டு தலில் இந்திய வீரர் முரளி ஸ்ரீ சங்கர் தங்கம் வென்றார். இந்தப் போட்டிகள் போர்ச்சுகலின் மையா நகரில் நேற்று முன்தினம் நடைபெற்றன. இந்தப் போட்டியில் நீளம் தாண்டுதலில் பிரிவில் பங்கேற்ற முரளி ஸ்ரீசங்கர், 7.75 மீட்டர் நீளம் தாண்டி முதலிடத்தைப் பிடித்தார். THANIGAI ESTATES & CONSTRUCTIONS PVT LTD.